தவெக திருச்சி கிழக்கு தொகுதி நிர்வாகி திவ்யா மாரிமுத்து ஏற்பாட்டில் சிங்கப்பெண்கள் விருது வழங்கும் விழா!

MsdMsd
Aug 31, 2026 - 10:28
தவெக திருச்சி கிழக்கு தொகுதி நிர்வாகி திவ்யா மாரிமுத்து ஏற்பாட்டில் சிங்கப்பெண்கள் விருது வழங்கும் விழா!

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் சிங்கப்பெண்கள் விருது வழங்கும் விழா டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. நிர்வாகி திவ்யா மாரிமுத்து ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் சுமங்கலி சம்பத், நிர்வாகிகள் வேதாத்திரி நகர் பாலு, ஏர்போர்ட் சரவணன், சண்முகம், பழக்கடை சரவணன், ஜெயராஜ், பழனிவேல், ராயல் சேட்டு, ஏர்போர்ட் ஜெகன், அன்னை தெரசா ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு சிங்கப்பெண்கள் விருதுகளை வழங்கி பாராட்டினர். மேலும் இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.