முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள்; திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை – பொதுமக்களுக்கு அன்னதானம்!

MsdMsd
Sep 16, 2026 - 11:47
Sep 16, 2026 - 11:48
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள்; திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை – பொதுமக்களுக்கு அன்னதானம்!

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சியில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். மாணிக்கவேல், கே.டி.பிச்சமுத்து, ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதுடன், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநிலப் பேச்சாளர் சிவாஜி சண்முகம், மலைக்கோட்டை சொக்கலிங்கம், அண்ணா சிலை விக்டர், பசங்க பிரதாபன், மார்க்கெட் மாரியப்பன், வாசுதேவன், மார்க்கெட் கோட்டத் தலைவர் மார்க்கெட் சம்சு, உறையூர் விஜி சேகர், தாகூர் தெரு முருகன், ராஜீவ் காந்தி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.