அதிமுக திருச்சி மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில், 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்ரீரங்கம், கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதன் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வேட்பாளர்கள் விபரம்
ஶ்ரீரங்கம் - R.மனோகரன், அமைப்புச் செயலாளர், அரசு தலைமை முன்னாள் கொறடா
திருச்சி கிழக்கு - க.ராஜசேகரன், திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர்
மணப்பாறை - டாக்டர். PL.விஜயகுமார், மருத்துவ அணி துணைச் செயலாளர்
திருவெறும்பூர் - ப.குமார், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்பி
லால்குடி - டாக்டர். M.லீமா ரோஸ், மகளிர் அணி இணை செயலாளர்
முசிறி - N.யோகநாதன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, இணை செயலாளர்
துறையூர் - இ.சரோஜா, பொதுக்குழு உறுப்பினர் துறையூர் தொகுதி
மண்ணச்சநல்லூர் - RV.பரதன், சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம்