திருச்சி: காந்தி ஜெயந்தியை ஒட்டி மகாத்மா காந்தி சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

MsdMsd
Oct 2, 2026 - 14:31
திருச்சி: காந்தி ஜெயந்தியை ஒட்டி மகாத்மா காந்தி சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, லட்சிய ஜனநாயக கட்சியின் (லஜக) திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில், தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர், நவநீதகிருஷ்ணன், தேவிகா, அர்ச்சனா மற்றும் பகுதி செயலாளர்கள் செக் மொய்தின், சிவராஜ், அப்பாஸ், தமிழ்ச்செல்வன், வீர மணிகண்டன், சேகர், ரங்கராஜ், கோபிநாத், கார்த்திகேயன், அகிலா, பாலாஜி, சுந்தர மகாலிங்கம், ஜெய் சிங்கராஜ, நஜிமா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அவரது தியாகங்களை நினைவு கூர்ந்தனர்.