லஜக மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா பிறந்தநாள் விழா - ஶ்ரீரங்கத்தில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!
லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இனிப்புகள் வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் மாபெரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் சசிகுமார் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திருச்சி வடக்கு மாவட்டப் பொருளாளர் ராஜ்குமார், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ஆர்.எஸ். பூபதி, ஸ்ரீரங்கம் துணைப் பகுதிச் செயலாளர் துரை சிங்கம், மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிப் பொருளாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.கே. ஆனந்த், மும்மூர்த்தி, வட்டச் செயலாளர்கள் செந்தில், முத்து, குமரன், அரவிந்த், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட வர்த்தக அணிப் பொருளாளர் பிரபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கவின் கார்த்திக், ஒன்றியச் செயலாளர்கள்: மோகன்ராஜ் (ஸ்ரீரங்கம் மேற்கு), அருண் (ஸ்ரீரங்கம் வடக்கு), மணிகண்டன் (ஸ்ரீரங்கம் கிழக்கு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.