திருவெறும்பூர் தொகுதி என்பது வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு திட்ட பணிகளை இந்த தொகுதியில் செய்து உள்ளோம். மேலும் வளர்ச்சி பாதியை நோக்கி செல்வதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை தொகுதி வேட்பாளர் அப்துல் சமது ஆகியோர், திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு, வேட்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்து, வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ், அப்துல் சமது ஆகியோர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டி பேசினர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்:-- என் மீதும் என் தொகுதி மக்கள் மீதும் முதல்வர் நம்பிக்கை வைத்ததன் அடிப்படையில் தான் மீண்டும் மூன்றாவது முறையாக திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வருக்கு நன்றி. திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசை. மேலும் போட்டியிடும் மூன்று பேரும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்களை நேரில் சந்தித்து நாங்கள் செய்த சாதனைகளை எடுத்து கூறி வாக்கு கேட்போம். குறிப்பாக எங்களுடைய பலமே எங்களுடைய தோழமைக் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் தான். ஆகையால் தான் தோழமைக் கட்சி நிர்வாகிகளையும், தலைவர்களையும் ஒவ்வொருவராக நேரில் சென்று சந்தித்து வருகிறோம். விஜய் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு? ஜனநாயக நாடு. இதில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி போடலாம். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தேர்தலில் போட்டியில் இடவேண்டும் என்றார். எங்களுடைய தலைவர் தெளிவாக சொல்லிவிட்டார், இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல். ஆகையால் எங்களுடைய இலக்கு டெல்லி அணியை வீழ்த்துவது ஆகும். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப்படும் என நேற்றைய தினம் கழகத் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது நிச்சயம் மாணவர்களின் வாழ்வாதத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த திட்டமாக இருக்கும். திருவரம்பூர் தொகுதி என்பது வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு திட்ட பணிகளை இந்த தொகுதியில் செய்து உள்ளோம். மேலும் வளர்ச்சி பாதியை நோக்கி செல்வதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இதுவரை 10 அறிவிப்புகள் நான் அறிவித்திருந்தால் அதில் ஏழு அறிவிப்புகளை நிறைவேற்றி உள்ளேன். மேலும் தொகுதி சார்ந்த தேர்தல் அறிக்கை வெளியிடும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்தார்.