மேற்கு தொகுதியில் ஒருநாள் மழைக்கே சேரும், சகதியுமான சாலைகள் - அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை - மாணவி வெளியிட்டுள்ள வீடியோ வைரல்!
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, உறையூர் அம்மன் நகர் பகுதியில் சாலைகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழை நேரங்களில் இப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி, சேரும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவர்கள் என பலரும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த தொகுதியில், சாலை வசதி சரியில்லை என மாணவி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.