திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரம்!
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை, வரகனேரி, ஜெயில் பேட்டை, உப்புபாறை, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளர் ராஜசேகரன் செல்லும் இடங்களில் பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.