கிழக்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரனுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் சுற்றுப்பணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று பாலக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கிருஷ்ணன் கோவில் தெருவில் பாஜக பாலக்கரை மண்டல் துணை தலைவர் பாரதி பொன்னுசாமி தலைமையில் வேட்பாளர் ராஜசேகரனுக்கு மலர் தூவி, மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து மற்றும் அதிமுக மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் வேட்பாளர் ராஜசேகரனுக்கு ஆரத்தி எடுத்து முக முயற்சியோடு வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட பட்டியல் அணி செயலாளர் மேனகா பாரதி, பாலக்கரை மண்டல் துணை தலைவர் அனிதா சசிகுமார், மண்டல் பொது செயலாளர் கார்த்தி, சரவணன் மற்றும் 34 வது வார்டு, 181 வது பூத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.