வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களிடம் அமைச்சர் நேரு வாக்கு சேகரிப்பு!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும், திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு இன்று, பீமநகர் பகுதியில் உள்ள துருப்பு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது தொழுகை முடிந்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம், திமுக அரசால் இஸ்லாமியர்களுக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது திமுக மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.