பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து வாக்கு சேகரித்த மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன்!
திருச்சி மேற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று தென்னூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய சகோதரர்களை, வேட்பாளர் ராஜசேகரன் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.
தொழுகை முடிந்து வெளியில் வந்தவர்களிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.