திருச்சி உறையூர் பகுதியில் அமைச்சர் நேரு தீவிர பிரச்சாரம்!

MsdMsd
Apr 11, 2026 - 23:08
திருச்சி உறையூர் பகுதியில் அமைச்சர் நேரு தீவிர பிரச்சாரம்!

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரும், திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று (ஏப்.11) திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் அக்ரஹாரம், மந்தை, வடக்கு முத்துராஜா தெரு, அகமது காலனி, ஞானம் காலனி, புத்தூர் புது தெரு, ராமலிங்க நகர், கனரா பேங்க் காலனி, சீனிவாச நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஒவ்வொரு வீதியாக சென்று திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரம் சென்ற இடமெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழிநெடுகிலும் திரண்டு நின்று அமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் ஆரவாரத்துடன் அவருக்குப் பொன்னாடை அணிவித்தும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..