100% வாக்குபதிவை வலியுறுத்தி ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு!

MsdMsd
Mar 23, 2026 - 18:43
100% வாக்குபதிவை வலியுறுத்தி ராட்சத பலூன் பறக்க விட்டு விழிப்புணர்வு!

இந்திய தேர்தல் ஆணையத்தால், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு, ரங்கோலி கோலம் வரைதல், வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஓட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்வுகள், என பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் "வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை, வாருங்கள் 100 சதவீதம் வாக்களிப்போம்" என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ராட்சத பலூனை தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஜெகதீஷ் பிரசாத் மீனா, ஜெரம் பேடா, சக்ரதார்பாபு, பிஜய் குமார்தாஸ், பிரவீன் குமார் லஷ்கர், மதுஸ்மிதா சாஹு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.