டெண்டர் முறையில் வெளிமாநில ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் இருக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கோரிக்கை!

MsdMsd
May 20, 2026 - 19:57
டெண்டர் முறையில் வெளிமாநில ஒப்பந்ததாரர்கள்  பங்கேற்காமல் இருக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கோரிக்கை!

தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

மாநில தலைவர் திரிசங்கு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர் ஐயப்பன், மாநில செயலாளர் வெங்கடேசன், மாநில துணை தலைவர் முத்து கோவிந்தன், மாநில செயலாளர் முருகேசன், மாநில துணை செயலாளர் சிவக்குமார், மாநில பொருளாளர் நிம்ரோட் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு பின்னர் மாநிலத் தலைவர் திரிசங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அதில்:--

டெண்டர் முறையில் புதிய அரசின் கொள்கை முடிவை சங்கம் முழுமனதோடு வரவேற்கிறது. டெண்டர் முறையில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வெளிமாநில ஒப்பந்ததாரர்கள் மற்றும் தகுதியில்லாத ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் இருக்க மேற்கண்ட டெண்டர் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மத்திய அரசு நிதி விடுவிக்காமல் நிலுவையில் உள்ள ஊரக உள்ளாட்சி துறை சாலை பணிகளுக்கான நிதியை, தமிழக முதல்வர் பெற்று தந்து, ஒப்பந்தக்காரர்களை வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வழிவகை செய்ய வேண்டும்.

கிழக்கு ஆசிய போரால் தார் விலை 100% உயர்ந்து உள்ளதால் உடனடியாக அவற்றிற்கான விலை விகிதாச்சாரத்தை மத்திய அரசு வழங்குவது போல் மாநில அரசும் உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.