திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள்!

MsdMsd
Jun 9, 2026 - 09:29
Jun 10, 2026 - 09:30
திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள்!

திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதீக் தயாளை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்து, அவருடைய பணி சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், சாக்ஸிடு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சசி ரேவதி, தின சேவை அறக்கட்டளை தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் சிவபிரகாசம் மற்றும் பகவதி கண்ணன், மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர். ஏ. தாமஸ், கார்த்திகேயன், தமிழ்செல்வி ராதாகிருஷ்ணன், கார்த்திகா, தாய் நேசம் அறக்கட்டளை தலைவர் ஹெப்சிபா, சத்தியா, ராக்கினி மார்கெட் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.