திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்!

MsdMsd
Mar 24, 2026 - 19:45
திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவையான அளவில் இருப்பு உள்ளது. தற்போது வேட்பாளர்களின் பெயர், சின்னம் இடம் பெறும் வாக்குப்பதிவு கருவி 7,906-ம், கட்டுப்பாட்டு கருவி 3,541-ம், ஒப்புகை சீட்டு வழங்கும் வி.வி.பேட் கருவி 3,810-ம் - இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களின் முதல் கட்ட சோதனை நிறைவடைந்து, இன்று தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவங்கியது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இருந்து பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்படும். மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் சட்டமன்ற தொகுதி வாரியாக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பட்டியல் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும். அதன் பின்னர், அவை மண்டல வாரியாகவும். வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்பட உள்ளது.