மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் குளறுபடி ; திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

MsdMsd
Jun 26, 2026 - 18:24
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் குளறுபடி ; திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு நடத்தும் நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களைக் கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செயல்பாடுகளை கண்டித்தும், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மெயின்கார்டு கேட் தபால் நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரெக்ஸ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், பொருளாளர் முரளி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோபி, வரகனேரி இஸ்மாயில், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ் மற்றும் அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, அபிநயா, ஷீலா செளஸ், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், கலைப்பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், சக்தி அபியான், மாரீஸ்வரி, ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், சிறும்பான்மை பிரிவு மொய்தின் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.