திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் அறிமுகம்!

MsdMsd
Jul 17, 2026 - 17:55
திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் அறிமுகம்!

திருச்சியில் நரம்பியல் மற்றும் மூளை அறுவை சிகிச்சை துறையில் புதிய மைல்கல்லை எட்டும் வகையில், அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை திருச்சி மற்றும் டெல்டா பகுதிகளில் முதல் முறையாக அதிநவீன நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட சி.டி. பெர்ஃப்யூஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளில் மிகத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்கும் நவீன 'Image Guided Surgery' தொழில்நுட்பமே இந்த நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் ஆகும். ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் போன்று செயல்படும் இந்த அமைப்பு, நோயாளியின் அறுவை சிகிச்சைக்கு முன்பு எடுக்கப்பட்ட சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் படங்களை, அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் உண்மையான மூளை மற்றும் தண்டுவட அமைப்புடன் ஒருங்கிணைத்து, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மிகத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்குகிறது.

இந்த தொழில்நுட்பமானது மூளைக் கட்டிகளை மிகுந்த துல்லியத்துடன் கண்டறிந்து பாதுகாப்பாக அகற்றவும், மூளையின் முக்கிய செயல்பாட்டு பகுதிகளைப் பாதுகாத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் பெரிதும் உதவுகிறது. மேலும், சிக்கலான மூளை, மண்டையோட்டு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைகளை அதிக பாதுகாப்புடன் மேற்கொள்ளவும், அறுவை சிகிச்சைக்கான சரியான பாதை, கோணம் மற்றும் ஆழத்தைத் துல்லியமாக கணிக்கவும் இது வழிவகை செய்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டு, நோயாளி விரைவில் குணமடைய உதவுகிறது.

இந்த மேம்பட்ட நரம்பியல் சேவைகளை வழங்கும் மருத்துவக் குழுவில் இன்டர்வென்ஷனல் நியூராலஜிஸ்ட் டாக்டர் ஃபசல் இலாஹி, நியூரோ சர்ஜன்கள் டாக்டர் சையத் அலி, டாக்டர் மயிலன் சின்னப்பன் மற்றும் டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அதிநவீன மருத்துவ வசதிகளின் அறிமுக நிகழ்ச்சியில், அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் மெடிக்கல் சூப்பிரண்டெண்ட் டாக்டர் ஸ்ரீவித்யா வரவேற்புரை வழங்கினார். அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் தலைவர் மற்றும் அசோசியேட் துணைத் தலைவர் ஜெயராமன் இந்த அதிநவீன நியூரோ நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

இந்த அறிமுகத்தின் மூலம், திருச்சி மற்றும் டெல்டா பகுதிகளில் உலகத் தரத்திலான நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சைகளை, மக்களின் சொந்த ஊரிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வழங்கும் புதிய அத்தியாயத்தை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை தொடங்கியுள்ளது. இந்த புதிய வசதிகள் இப்பகுதிகளில் நரம்பியல் சிகிச்சைக்கான புதிய தரநிலையை உருவாக்கும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என்பதில் ஐயமில்லை.