திருச்சியில் "வீ தி லீடர்ஸ்" அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்!

MsdMsd
Jul 19, 2026 - 11:52
Jul 20, 2026 - 11:52
திருச்சியில் "வீ தி லீடர்ஸ்" அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்!

திருச்சியில் 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்; இளைஞர்கள் ஆர்வம்!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருதாண்டகுறிச்சி பகுதியில் இன்று நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த முகாம், அமைப்பின் நிர்வாகி பிரபாகரன் தலைமையில் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, ஆர்வத்துடன் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு உடனடி அங்கீகாரமாக, ஆன்லைன் மூலம் டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் (Digital Membership Cards) வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், உள்ளூர் பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.