தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன் ஏந்தி அமைதி பேரணி!

MsdMsd
Aug 10, 2026 - 22:14
Aug 10, 2026 - 22:17
தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன் ஏந்தி அமைதி பேரணி!

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் அமைதி பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இன்று "ரிஜக்ட் மோடி லிமிடேசன்" என்ற தலைப்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தொடங்கிய இப்பேரணியை மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட பொருளாளர் முரளி, மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் பகதுர்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கண்டன உரையாற்றினார். 

அருணாச்சலம் மன்றத்தில் தொடங்கிய இந்த பேரணி மேலரன் சாலை, மரக்கடை வழியாக காந்தி மார்க்கெட் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. இந்த பேரணியில் வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கைகளில் கைகளில் கருப்பு பலூன்களை ஏந்தியபடி மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

மேலும் இந்த பேரணியில் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள் கள்ளத்தெரு குமார், ஜெகதீஸ்வரி, மார்க்கெட் சம்சுதீன், வெல்லமண்டி பாலு மற்றும் கே.கே.நகர் அருண் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கிக்யராஜ், ஜெயப்ரகாஷ், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், சத்தியநாதன், விமல், செல்வம், சிந்தாமணி கணேசன், அசோகன், செந்தமிழ் செல்வன், முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், ஆராய்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கலைப்பிரிவு மாநில பொதுசெயலாளர் அருள், சிவா வைத்தியநாதன், கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா படேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியபுரம் எட்வின், உறையூர் பாக்கியராஜ், வரகனேரி இஸ்மாயில், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், திருவனைக்கோவில் தர்மேஷ், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலாசெளஸ், அபிநயா, குணசித்ரா, சக்தி அபியான் தோழி மாரீஸ்வரி, அமைப்பு சாரா பிரிவு மகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், இலக்கிய பிரிவு பத்மநாபன், கலைப்பிரிவு சுப்புராஜ், ஐடி பிரிவு கிளமெண்ட், நேசவாளர் பிரிவு சேகர், ஊடக பிரிவு செந்தில், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், சில்வஸ்டர், பொறியாளர் அணி இம்ரான், சிறும்பான்மை பிரிவு மொய்தின், என்ஜிஓ கண்ணன், வார்டு தலைவர்கள் பாலாஜி, தினேஷ், மணிமேகலை, மாதவன், யோகநாதன், விஜி, சரவணன், பாண்டியன், மும்தாஜ், கண்ணன், பெரியசாமி, பூபாலன், ரமேஷ், செபாஸ்தியர், அபிராகாம், சரவணன், ரஃபிக், லட்சுமணன், ஜஹிர்உசேன், அபுதாகிர், சிவலிங்கம், சிவகுமார், பால்சாமி, அப்துல்சலாம், சோனராமநாதன், வார்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.