திருச்சி பொன்மலை பகுதியில் மதுபானம் விற்ற நபர் கைது!

MsdMsd
Mar 25, 2026 - 19:23
திருச்சி பொன்மலை பகுதியில் மதுபானம் விற்ற நபர் கைது!

திருச்சி கொட்டப்பட்டு எப் டைப் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் அனுமதி இன்றி மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை இன்ஸ்பெக்டர் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்த சிவக்குமார் (வயது 39)என்பவர் அரசு அனுமதி இன்றி மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். தொடர்ந்து சிவகுமார் நீதிமன்ற ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.