திருச்சி மற்றும் தஞ்சையில் நிப்பான் பெயின்ட் இந்தியாவின் புதிய NEO ஹோம்ஸ் கடைகள் திறப்பு!
தமிழ்நாட்டில் தனது சில்லறை வர்த்தக வலையமைப்பை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நான்கு புதிய 'NEO ஹோம்ஸ்' அனுபவ சில்லறை விற்பனைக் கடைகளை நிப்பான் பெயின்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் 'சுப்ரீம் பெயிண்ட்ஸ் & ஹார்டுவேர்' மற்றும் 'NA டிரேடர்ஸ்' நிறுவனங்களுடனும், தஞ்சையில் 'புஷ்பம் ஹார்ட்வேர்' மற்றும் 'VS எண்டர்பிரைசஸ்' கூட்டாளர்களுடனும் இணைந்து இந்த புதிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, நாடு முழுவதும் நிப்பான் பெயின்ட் இந்தியாவின் NEO ஹோம்ஸ் வலையமைப்பு தற்போது மொத்தம் 26 கடைகளாக உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், வண்ணத் தீர்வுகள், பெயிண்டிங் நிபுணத்துவம் மற்றும் பல்வேறு ஓவியக் கருவிகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்குவதே இக்கடைகளின் முக்கிய நோக்கமாகும். வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் நேரடியாகச் சென்று, தங்களுக்கு உகந்த வண்ணங்களையும் தீர்வுகளையும் நிபுணர்களின் வழிகாட்டுதலோடு எளிதாகத் தேர்வுசெய்யலாம்.
இந்த வணிக விரிவாக்கம் குறித்துப் பேசிய நிப்பான் பெயின்ட் இந்தியாவின் அலங்கார வணிகப் பிரிவின் தலைவர் திரு. மார்க் டைட்டஸ், தமிழ்நாட்டில் ஏற்கனவே பலமான சந்தை இருப்பைக் கொண்டுள்ள நிறுவனம், நுகர்வோரின் வீட்டு அலங்காரத் தேவைகளுக்குத் துணையாக அவர்களுடன் நெருக்கமாக இணைவதே தங்களின் முக்கிய இலக்கு என்றார். மேலும், 26 கடைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள இந்நிறுவனம், எதிர்கட்சியிலும் டீலர் கூட்டாளர்களுடன் இணைந்து நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் தனது சேவையைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.