அல் ஆதம் ஹஜ் சர்வீஸ்: 2027 ஹஜ் பயணத்திற்கு 2 விதமான பேக்கேஜ்கள் அறிமுகம் - டெல்டா மாவட்ட மக்களுக்கு அழைப்பு!
திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் குழும தலைவரும், தமிழக ஹஜ் ஏற்பாட்டாளர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான லேனா இஷாக், 2027 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயண முன்பதிவு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து இந்திய அரசின் அனுமதியோடு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான டெல்டா மாவட்டப் பட்டியலை வெளியிட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-
வருகின்ற 2027 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் சார்பில் டெல்டா மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட ஹாஜிகளை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பேக்கேஜ் விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்
கடந்த 25 ஆண்டு காலமாக ஹஜ் சேவை செய்து வரும் அல் ஆதம் நிறுவனம், ஹஜ் பயணிகளை அழைத்துச் செல்ல இரண்டு விதமான பேக்கேஜ்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரு பேக்கேஜ் 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகவும், மற்றொரு பேக்கேஜ் 8 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபுல் பேக்கேஜ் (Full Package): 35 நாட்கள் ஷார்ட் பேக்கேஜ் (Short Package): 20 நாட்கள் கார்ப்பரேட் பேக்கேஜ் (Corporate Package): 14 நாட்கள் என்ற கால அளவுகளில் பயணம் மேற்கொள்ள அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சவூதியில் தங்குவதற்கு அனைத்து விதமான வசதிகளும், தரமான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை திருச்சி விமான நிலையத்தில் இருந்து 100 ஹாஜிகளை ஹஜ் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
டெல்டா மாவட்ட பொறுப்பாளர் மற்றும் முகவரி
நிறுவனத்தின் டெல்டா மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பு, திருச்சியில் கடந்த 45 ஆண்டுகளாக ஹஜ் பயண சேவை சிறப்பாக மேற்கொண்டு வரும் ஹாஜி எம்.எஸ். பசல்க்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் திருச்சி தென்னூர் பள்ளிவாசல் எதிரில் உள்ள நிறுவனத்தை நேரில் அணுகி பயன் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹஜ் பயணம் மேற்கொள்வதில் இருந்த சில பிரச்சனைகள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஹஜ் இல்லம் கட்டி வரும் தமிழக அரசு, தனியார் ஹஜ் கமிட்டி ஏற்பாட்டாளர்களையும் இந்த இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த ஹஜ் பயணிகளுக்கான மானிய தொகையை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ரூபாய் 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மத்திய அரசு விதிக்கும் ஜிஎஸ்டி மற்றும் டிடிஎஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு மத்திய அரசுக்கும் நிதி அமைச்சருக்கும் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
முன்பதிவு விவரங்கள்
வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி: முதல் மாடி, எண் 9, திருச்சி தென்னூர் பள்ளிவாசல் எதிரில். தொடர்பு எண்கள்: 74015 83786, 98430 32113.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது ஆதம் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் ஏ.எம். பாதுஷா, சிஇஓ அல் ஆதம் குடும்ப சிஇஓ ஹாஜி பசல், முகமது சிகான், செல்வ நகர் ஜமாத் தலைவர் ஹாசிம், இமாம் அகமது ஜெய்னி, முஸ்லீம் லீக் அமீர், ஹாசிக், இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.