அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்வது உறுதி; அவரது அரசியல் வாழ்க்கை இந்த தேர்தலோடு அஸ்தமனமாகும் - திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் பேட்டி!
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன் ஆகியோர் இணைந்து திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அமமுக மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:--
திமுகவுக்கு ராஜசேகர் என்றாலே பிடிக்காது, தற்போது திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் இரண்டு ராஜசேகர் போட்டியிடுகிறோம். அமைச்சர் கே.என்.நேரு லால்குடியில் இரண்டு முறை தோற்று உள்ளார். திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பலமுறை தோல்வி கண்டு உள்ளார். வெற்றியை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது மாறி மாறி வரும். யார் வெற்றி என 23ஆம் தேதி மக்கள் முடிவு செய்வார்கள்.
அமைச்சர் கே என் நேரு 1200 கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளார். இன்ஜினியரிடம் பணம் வாங்கி ஊழல் செய்துள்ளார். ஹவாலா பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. இதற்கான ஆதாரம் அமலாக்கத்துறையிடம் உள்ளது. முறையாக நடவடிக்கை மேற்கொண்டால் அமைச்சர் கே.என்.நேரு திகார் ஜெயிலுக்கு செல்ல வேண்டும். தேர்தலுக்கு முன்பாக அல்லது தேர்தலுக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்வது உறுதி.
அமைச்சர் பொன்முடி தேர்தலில் போட்டியிட முடியவில்லை. அவர் குற்றவாளி என தீர்ப்பு வந்து தண்டனை உறுதியாகிய நிலையில் பொன்முடி தற்போது தேர்தலில் போட்டியிட முடியவில்லை. திமுகவின் ஆட்சி முழுக்க முழுக்க மன்னர் ஆட்சி. திமுகவின் மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும். ஜனநாயகம் கண்டிப்பாக வெல்லும். கண்டிப்பாக இந்த முறை தேர்தலில் திமுக வீழ்த்தப்படும்.
அமைச்சர் கே.என்.நேருவின் அரசியல் இந்த தேர்தலுக்கு பின் அஸ்தமனமாகும். வெளிநாட்டில் யாருக்கு பணம் அனுப்பினார். அவருக்கு யார் பணம் அனுப்பினார்கள். அவர்களுடைய சகோதரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் வந்த ஆதாரம். இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து பணம் வந்துள்ளது. என்ற ஆதாரங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் சிறைக்கு செல்வார்கள்.
நானும் நேருவும் 1989 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தலுக்கு வந்தோம். அவருடைய சொத்து மதிப்பும் என்னுடைய சொத்து மதிப்பையும் கணக்கிடுங்கள். யார் பணம் சேர்த்து உள்ளனர் என்று தெரியும். விரைவில் சொத்து மதிப்பு ஆதாரங்களை வெளியிடுவேன் எனக் கூறினார்.