மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சியில் சமண மதத்தினர் பேரணி!

MsdMsd
Mar 31, 2026 - 23:09
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சியில் சமண மதத்தினர் பேரணி!

சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் (சைத்ர மாத வளர்பிறை 13-ம் நாள்) மகாவீர் ஜெயந்தி பேரணி சிறப்பாக நடத்தப்படுகிறது. அகிம்சை, உண்மை, போதனைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த பேரணியில் சமண மதத்தினர் திரளாக கலந்து கொள்வர். அந்த வகையில் இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட சமண மதத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று பேரணியாக சென்றனர். மகாவீர் சிலையை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக சென்ற அவர்கள் அச்சிலைக்கு மலர் தூதி வழிபாடும் செய்தனர். திருச்சி நடு குஜிலி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் தொடங்கிய பேரணி பெரிய கடை வீதி, கம்மலாத்தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது.