திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் - அனுமதி வழங்கக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு!

MsdMsd
Mar 31, 2026 - 23:11
திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் - அனுமதி வழங்கக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே அவர் மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், வரும் ஏப்.2ம் தேதி திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக 2ம் தேதி காலை திருச்சி வரும் விஜய், திருச்சி மாநகராட்சி மண்டலம் - 2 அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து பாலக்கரை, மரக்கடை, கே.கே.நகர் உள்ளிட்ட நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக அனுமதி வழங்கக்கோரி தவெக உயர்மட்ட நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் திருச்சி டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளர் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் விஜயின் பயண திட்டம் குறித்து முழுமையாக நாளை அறிவிக்கப்படும். தற்போது எதுவும் கூற இயலாது என செங்கோட்டையன் தெரிவித்தார்.