திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்!

MsdMsd
Apr 2, 2026 - 22:49
திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் விஜய், பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் - 2 அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இதற்காக விமான நிலையத்தில் இருந்து 11:30 மணியளவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய், நல்லநேரம் தொடங்குவதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து 12:30 மணியளவில் மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் .