அ.இ.பு.த.ம.மு.க ஶ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் விஜய், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் விஜய் நேற்று தனது மாதாவாளர்கள் மற்றும் கட்சியினருடன் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக வந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மண்டல தேர்தல் பொறுப்பாளர் கோவிந்தராஜ், கிழக்கு தொகுதி வேட்பாளர் நந்தகுமார் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மண்டல தேர்தல் பொறுப்பாளர் கோவிந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.. திமுக மற்றும் அதிமுகவை தோற்கடித்து அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி அடையும் சின்னம்மா தலைமையில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. நடிகர் கமல் எப்படி அரசியலுக்கு வந்து சென்றாரோ.. அதேபோன்றுதான் நடிகர் விஜய்யும் வருவார்..சென்று விடுவார்.. என்றார்.