திமுக அரசின் ஊழல்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் ராஜசேகரன்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026 இல், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து, தொகுதி மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று (ஏப்ரல்.10) திருச்சி தென்னூர் பகுதிக்குட்பட்ட ஜெனரல் பஜார், பட்டாபிராமன் தெரு, சங்கீதபுரம், மல்லிகைபுரம், திரௌபதி அம்மன் கோவில் தெரு, சண்முகா நகர், ரங்கா நகர், மேலத்தெரு, கீதா நகர், அம்மையப்ப நகர், சந்தோஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று, பொது மக்களை நேரில் சந்தித்து, திமுக அரசின் ஊழல்களை எடுத்துக்கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைய குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.