ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

MsdMsd
Jul 22, 2026 - 12:38
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் பிரதமர் இல்லம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர்.

இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமை வகித்தார். பொருளாளர் முரளி, அமைப்பு சாரா பிரிவு மாநில தலைவர் மகேந்திரன் மற்றும் சிறும்பான்மை பிரிவு மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ராஜ்குமார், ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, விமல், பூக்கடை பண்ணீர், டி.கே.எஸ் சுப்பையா, சத்தியநாதன், சிவா வைத்தியநாதன், தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் பகதூர்ஷா, புத்தூர் மலர் வெங்கடேஷ், ஏர்போர்ட் கனகராஜ், சுப்பிரமணியப்புரம் எட்வின், காட்டூர் ராஜா டேனியல் ராய், அணி தலைவர்கள் அமைப்பு சாரா பிரிவு மகேஷ், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், மகிளா காங்கிரஸ் அஞ்சு, குணசித்ரா, விவசாய பிரிவு அண்ணாதுரை, சக்தி அபியான் மாரீஸ்வரி, எஸ்சி பிரிவு கலியபெருமாள், சிறும்பான்மை பிரிவு மொய்தின், ஓபிசி ரியாஸ், இளைஞர் காங்கிரஸ் அபுதாகிர், மணிவேல், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், பொறியாளர் அணி இம்ரான், ஐடி பிரிவு டேவிட், என்ஜீஓ கண்ணன், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரபாகரன், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், சரவணன், பத்மாவதி, யோகநாதன்,சம்பத், சப்தரிஷி, பெரியசாமி, பூபாலன், ஜஹிர், ரபிக், மூர்த்தி, சையது இப்ராஹிம், மணி, வித்தியாதாரன், விஜி, மும்தாஜ், சாகுல் அமீது உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.