எஸ்.சி, எஸ்.டி மற்றும் பி.சி.ஆர் வழக்குகளில் சட்டவிரோதப் பதிவுகளைத் தடுக்கக் கோரி அமைச்சரிடம் மனு - BC, MBC, DNT கூட்டமைப்பு வலியுறுத்தல்!

MsdMsd
Sep 25, 2026 - 17:48
Sep 25, 2026 - 17:49
எஸ்.சி, எஸ்.டி மற்றும் பி.சி.ஆர் வழக்குகளில் சட்டவிரோதப் பதிவுகளைத் தடுக்கக் கோரி அமைச்சரிடம் மனு -  BC, MBC, DNT கூட்டமைப்பு வலியுறுத்தல்!

SC/ST மற்றும் PCR சட்டங்களின் கீழ் சட்டத்திற்கு புறம்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், BC, MBC, DNT மக்களின் சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, BC, MBC, DNT பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோவை சர்க்யூட் ஹவுசில் இன்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமாரை, BC, MBC, DNT பாதுகாப்பு கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், SC/ST மற்றும் PCR சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யும் போது உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் உண்மைத் தகவல்களை முறையாகப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சட்டத்திற்கு புறம்பான அல்லது ஆதாரமற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுபோன்ற வழக்குகளால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் BC, MBC, DNT மக்களின் சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பின்போது BC, MBC, DNT பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன், அகில பாரத பார்க்கவ குல சங்கம் நிறுவனத் தலைவர் திருமலை எம்.ரவி, உப்பிலிய நாயக்கர் மாநிலத் தலைவர் ஜெகநாதன், மாநிலத் துணைத் தலைவர் ஆ. தங்கவேல் பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் கோவை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வித்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.